வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை குறையும்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      வர்த்தகம்
petrol-diesel-vehicle

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததுடன், இவ்விரண்டின் மீதான வாட் வரியை குறைக்கும்படி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து விட்டது. அதே சமயம், வாட் வரியை குறைக்கும்படி அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டது.

மத்திய அரசின் அறிவுரையை சில மாநிலங்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டு வாட் வரியை குறைத்துவிட்டன. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் தங்களின் வரி வருவாய் பாதிக்கும் என்று மத்திய அரசின் யோசனையை உடனடியாக நிராகரித்துவிட்டன. மாநில அரசுகள் இது குறித்து கருணையுடன் சிந்திக்க வேண்டும் என்று கவலை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து