முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க- தெலுங்கு தேசம் கூட்டணி உடைகிறது? முடிவை அறிவிக்கிறார் சந்திரபாபு நாயுடு

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

ஐதராபாத், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வது குறித்து இன்னும் ஒரிரு நாட்களில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசு மீது அதிருப்தி தெரிவித்திருப்பதால் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி விரைவில் முறியும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முக்கிய முடிவை எடுப்பது தொடர்பாக தனது கட்சி எம்பிக்களுடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். மத்திய பட்ஜெட்டில் ஆந்திர அரசின் கோரிக்கைகளை நிறைவேற்றும் திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை என பா.ஜ.க. மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்பட்டது.ஆனால் கடந்த வாரம் அமராவதியில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் பாஜக கூட்டணியில் தொடரப்போவதாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒய்.எஸ் சவுத்தரி தெரிவித்தார்.
ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு தற்போது துபாயில் உள்ளார். இந்நிலையில் பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்வது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்பிக்களிடம் போன் மூலம் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநில வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை என தெலுங்கு தேசம் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் எம்பிக்களிடம் போனில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திரா இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா என கேட்டு கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் கூட்டணி குறித்து இன்னும் இருதினங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தனது எம்பிக்களிடம் கூறியுள்ளார்.

கடந்த 15 நாட்களில் தனது கட்சியால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனால் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரான ஒய்.எஸ் சவுத்தரி கடப்பாவில் உள்ள இரும்பு ஆலை பொலவரம் திட்டங்கள், விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலம் போன்ற பல திட்டங்கள் சேரவில்லை என நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியும் ஆந்திர எம்.பி.க்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சந்திரசேகர ராவின் மகளான எம்.பி கவிதா, ஆந்திராவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து