முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-4 தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் 11.02.2018 அன்று நடைபெறும் குரூப்-4 போட்டி எழுத்துத் தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில்  நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்ததாவது:

ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-ஐஏ  பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் 13 வட்டங்களில் 243 தேர்வு மையங்களில் 98726 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.  மேற்படி தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாவண்ணம் தேர்வு கூடங்களை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையில் 43 பறக்கும் படை அலுவலர்கள் (குடலiபெ ளுஙரயன), துணை வட்டாட்சியர் நிலைக்கு மேல் உள்ள 68 அலுவலர்களைக் கொண்டு நடமாடும் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேற்படி தேர்வு நடைபெறும் 243 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறை மூலம் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இத்தேர்வினை விழுப்புரம் வட்டத்தில் 28174 தேர்வர்களும், செஞ்சி வட்டத்தில் 6940 தேர்வர்களும், கள்ளக்குறிச்சி வட்டத்தில் 13973 தேர்வர்களும், சங்கராபுரம் வட்டத்தில் 5346 தேர்வர்களும், திண்டிவனம் வட்டத்தில் 11267 தேர்வர்களும், திருக்கோவிலூர் வட்டத்தில் 7498 தேர்வர்களும், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 6978 தேர்வர்களும், வானூர் வட்டத்தில் 5286 தேர்வர்களும், சின்னசேலம் வட்டத்தில் 4704 தேர்வர்களும், கண்டாச்சிபுரம் வட்டத்தில் 1589 தேர்வர்களும், மரக்காணம் வட்டத்தில் 1632 தேர்வர்களும், மேல்மலையனூர் வட்டத்தில் 1479 தேர்வர்களும் மற்றும் விக்கிரவாண்டி வட்டத்தில் 3860 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் தேர்வர்கள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு காலை 7.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தேர்வு மைங்களில் அடிப்படை வசதிகள் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் ஏற்பாடு செய்திட முதன்மை கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு அதனை உறுதி செய்திட சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்கள்ஃ சார் ஆட்சியர்ஃ வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.  தேர்வு நாளன்று தடையின்றி மின்சாரம் காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வழங்கிட விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதும் நபர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையத்திற்கு வருகைதர வேண்டும் எனவும், தேர்வு மையம் மற்றும் தேர்வு தொடர்பான இதர சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி எண்.04146 223264 மற்றும் 223268க்கு தொடர்பு கொள்ளுமாறும் விழுப்புரம் கலெக்டர் அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  தேர்வர்கள் எவ்வித சிரமமும் இன்றி தேர்வு எழுதிடவும், தேர்வு சுமுகமாக நடைபெறவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தேர்வு நடத்திட தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து