கோழி இறக்குமதிக்கு சவுதி தடை

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      வர்த்தகம்
chicken egg 2018 02 09

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவின் தசரகள்ளி கிராமத்தில் கோழிகளிடம் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக கால்நடை சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. இந்த அறிவிப்பை சவுதி அரேபிய கால்நடை இடர் மதிப்பீட்டுத்துறை அமைச்சக இயக்குனர் சனாத் அல்–ஹார்பி வெளியிட்டு உள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து