முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் 96,690 பேர்கள் குரூப் 4 தேர்வு எழுத உள்ளனர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தகவல்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      கடலூர்

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி - ஐஏ போட்டித்தேர்வு 11.02.2018 (ஞாயிற்றுக்கிழமை) மு.. மட்டும் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டித் தேர்வு கடலூர் மாவட்டத்தில், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி மற்றும் வேப்பூர் உள்ளிட்ட பத்து மையங்களில்; நடைபெற உள்ளது.

குரூப் - 4 தேர்வு

 இந்த போட்டித் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 96,690 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வர்கள் எளிதில் தேர்வு மையங்களைச் சென்றடைவதற்கு ஏதுவாக கூடுதலான பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு கூடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக் கூடங்களில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக தரை தளங்களில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வுக் கூடங்களிலும் தேர்வர்கள் வசதிக்காக தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கும் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் போட்டித் தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கும் பொருட்டு, துணை ஆட்சியர் நிலையில் 33 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து தேர்வு எழுதும் மையங்களிலும் முறைகேடுகள் நடைபெறாத வகையில் கண்காணிப்பதற்காக வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வர்களும் அவர்களது நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முகவரியினை சரிபார்த்து அவரவர் மையங்களில் தேர்வு எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்து நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் பணம் செலுத்தியதற்கான ரசீது (Pழளவயட சுநஉநip) மற்றும் புகைப்படம் ஆகியவற்றினை விண்ணப்பதாரர்களுக்கு அருகாமையிலுள்ள தேர்வு மையங்களில் சென்று தள்ளுபடி பட்டியலில் அவர்களது பெயர் உள்ளதா, இல்லையா என சரிபார்த்து, தள்ளுபடி பட்டியலில் அவர்களது பெயர் இல்லையென்றால் பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மேலும், தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு கைப்பேசி, கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை கண்டிப்பாக எடுத்து வர அனுமதியில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து