முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரி அருகே வஞ்சிவாக்கத்தில் சர்சைக்குரிய மண்ணுளிப் பாம்பினை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      திருவள்ளூர்
Image Unavailable

பொன்னேரி வட்டம்,வஞ்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் அந்த கிராமத்தின் அருகே உள்ள ஆற்றங்கரையில் நடந்து செல்லும் போது அதிசயமானதாகவும்,சர்சைக்குரியதாகவும் கருதப்படும் இரட்டைத்தலை மண்ணுளிப்பாம்பு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதைக் கண்டு அதனை லாவகமாக பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து அந்தப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் அசோக் பிரியதர்ஷனிடம் காண்பித்துள்ளனர்.

அனுமதியோடு

 இத்தகவலை அறிந்த சிலர் இளைஞர்களிடம் இப்பாம்புகள் நல்ல விலைக்கு வாங்கப்படுவதாக சொல்கிறார்களே விசாரியுங்கள் எனக்கூற,அசோக்கும்,இளைஞர்களும் வேண்டாம் இது சட்டத்திற்கு புறம்பானது இதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிடலாம் எனக்கூறி வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.மேலும் இதனை மீண்டும் காட்டுக்குள்ளோ அல்லது ஆற்றங்கரையிலோ விட்டால் பாம்பிற்கு ஆபத்து ஏற்படலாம்,

எனவே சென்னையிலுள்ள பாம்பு பண்ணையில் இதனை விட்டு விடலாம் என சென்னை கிண்டி பாம்பு பண்ணைக்கு தகவல் அளித்து அங்கு வந்த வனத்துறையினரின் அனுமதியோடு ஒப்படைத்தனர்.வன விலங்குகள் பாதுகாப்பிற்காக இது போன்று அனைவரும் கருணை மனப்பான்மையோடு செயல்பட வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் இளைஞர்களை வெகுவாக பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து