ரிசர்வ் வங்கி பெயரில் போலி இணையதளம்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      வர்த்தகம்
RBI 2017 10 21

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை குறித்த விவரங்களை கேட்டுப் பெறும் ரிசர்வ் வங்கியின் போலி இணையதளம் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: ‘‘ரிசர்வ் வங்கியின் இணையதளத்தைப் போல, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் போலியான இணையதளம் செயல்பட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்களிடம் இருந்து வங்கிக் கணக்குகள் மற்றும் விவரங்கள் கேட்கப்படுகின்றன. ஆன்லைனில் வங்கிக் கணக்கு விவரங்களை உறுதி செய்வதாக அந்த இணையதளம் தெரிவித்து தகவல்களைப் பெறுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அது அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து