முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் நடைபெறவுள்ள குரூப் 4 அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு முன்னேற்பாடுகள் செய்தல் தொடர்பாக வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, கருவூலத் துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை, மின்சார வாரியம் ஆகிய துறை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டது.

56 தேர்வு மையங்கள்

மேலும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தேதியில் நடைபெறும் தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஏழு வட்டங்களில், கிருஷ்ணகிரி வட்டத்தில் 50 தேர்வு மையங்களிலும், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் 6 தேர்வு மையங்களிலும், ஒசூர் வட்டத்தில் 34 தேர்வு மையங்களிலும், போச்சம்பள்ளி வட்டத்தில் 18 தேர்வு மையங்களிலும், ஊத்தங்கரை வட்டத்தில் 20 தேர்வு மையங்களிலும், பர்கூர் வட்டத்தில் 7 தேர்வு மையங்களிலும், சூளகிரி வட்டத்தில் 3 தேர்வு மையங்களிலும் மொத்தம் 43,638 தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

 போலீஸ் பாதுகாப்பு

மேலும்,தேர்வு நடைபெறும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, மின் வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தேர்வினை கண்காணிப்பதற்காக 29 சிறப்பு பறக்கும்படை அமைக்கப் பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து வசதி குறைவான பகுதிகளில் தனியார் கல்லூரிகள் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வு எழுதும் தேர்வர்கள் மேற்படி வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.சாந்தி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) குமரேசன் மற்றும் தமிழ்நாடு தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து