முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 லட்சம் பேர் எழுதும் வி.ஏ.ஓ. மற்றும் குரூப் - 4 தேர்வுகள் நாளை நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: கிராம நிர்வாக அதிகாரி மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருக்கும் இந்த தேர்வில் செல்போன் மற்றும் கால்குலேட்டர்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

494 பணியிடங்கள்...
இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
494 பணியிடங்கள் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் , 4 ஆயிரத்து 96 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மொத்தம் 9351 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், பேஜர், செல்போன், கால்குலேட்டர், நினைவகக் குறிப்பு மற்றும் புத்தகங்கள் மற்றும் மின்னனு சாதனமோ பதிவு செய்யும் உபகரணங்கள் ஆகியவற்றை தனி சாதனமாகவோ அல்லது கைக்கடிகாரம், மோதிரம் போன்றவற்றின் ஒரு பகுதியாகவோ தேர்வுக்கூட்த்திற்குள் எடுத்துவர முற்றிலும் அனுமதியில்லை.

உடற் பரிசோதனை...
மேற்படி பொருட்கள், உபகரணங்கள் விண்ணப்பதாரர்களிடம் இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாட்கள் செல்லாததாக்கப்படும் மற்றும்  அல்லது அவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். தேவை ஏற்படின் அவர்கள் முழுமையான உடற்பரி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில்லாமல் வரும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சரிபார்த்துக் கொள்ள...
விண்ணப்பதாரர்களின் விவரங்களடங்கிய தனித்துவ விடைத்தாட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதத் துவங்கும் முன் விடைத்தாளில் அச்சிடப்பட்டுள்ள விவரங்கள், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினில் உள்ளதுபோல் சரியாக உள்ளனவா என சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து