பாரத ஸ்டேட் வங்கியின் நஷ்டம் அதிகரிப்பு

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      வர்த்தகம்
State Bank 2018 02 10

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) டிசம்பர் காலாண்டு நிகர நஷ்டம் ரூ.1,887 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,152 கோடி அளவுக்கு லாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது. வாராக்கடன் மற்றும் இதர தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 111 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.8,942 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது ரூ.18,876 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடன் பத்திரங்கள் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வங்கியின் நஷ்டம் அதிகரித்துள்ளது என வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து