முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.52 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள சுற்றுச்சுவர் பணிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழா

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள சுற்றுச்சுவர் பணிக்கு ஆட்சியர் என்.வெங்கடேஷ், முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வருகைத் தரும் பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, ராம்கோ நிறுவனத்தின் மூலம் ரூ.52 லட்சம் செலவில் 550 மீட்டர் நீளத்தில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவரின் 5.6 அடி உயரத்திற்கு கட்டி எழுப்பப்பட உள்ளது. 3 நுழைவு வாயில்களுடன், சுற்றுச்சுவருக்கு மேலாக 2 அடியில் இரும்பு கம்பி வலைகள்  அமைத்து பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும், பத்திரிக்கையாளர்கள் நலன் கருதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த ஒய்வூதியத்தினை அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர், ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாரத ரத்னா புரட்சியர் டாக்டர்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அம்மா நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர், முதலமைச்சராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்துத் துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்த கையேடு, குறுந்தகடுகள், சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெறும் மாபெரும் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட உள்ளது. என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மூ.வீரப்பன், சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிந்து, ராம்கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொது மேலாளர் மணிகண்டன், ஜெகதீஸ்பாபு, வெங்கட், ராம்கோ நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து