உணவு தானிய உற்பத்தி இயக்கம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வேளாண்மை இயக்குநர் தஷ்ணாமூர்த்தி தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      விழுப்புரம்
viluppuram collector

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உணவு தானிய உற்பத்தியை தன்னிறைவு அடைய செயல்படுத்தப்படும் திட்டமான உணவு தானிய உற்பத்தி இயக்கம் தொடர்பாக, வேளாண்மை இயக்குநர் லி.தஷ்ணாமூர்த்தி,   தலைமையில், கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  முன்னிலையில்  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

இக்கூட்டத்தில் உணவு தானிய உற்பத்தி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  தமிழக அளவில் 100 இலட்சம் மெ.டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதல், விதைகள் மற்றும் உரங்கள் ஆகிய இடுபொருட்களை பயன்படுத்துதல், பயிர் சாகுபடி பரப்பை அதிகரித்தல், உற்பத்தித் திறனை உயர்த்தி உற்பத்தியினை அதிகரித்தல் ஆகியவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பயிர் சாகுபடி பரப்பு இலக்கான 156100 எக்டேரில், இதுவரை 159681 எக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  மேலும் 15100 எக்டேர் பரப்பில் நடப்பு நவரை பருவத்தில் சாகுபடிக்கு கொண்டு வரப்படும் எனவும், இதன்மூலம் நடப்பாண்டில் 174781 எக்டேர் சாகுபடிக்கு கொண்டுவரப்பட்டு 8.32 லட்சம் மெ.டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், சிறுதானியங்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்களில் நடப்பாண்டு 61632 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதன் மூலம் 3.314 இலட்சம் மெ.டன் உற்பத்தி செய்யப்படும் எனவும், பயறுவகை பயிர்களில் 87700 எக்டேர் பரப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை சுமார் ஒரு லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் 89600 மெ.டன் பயறுவகைகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் தமிழக அளவிலான உணவு உற்பத்தி இலக்கான 100 இலட்சம் மெ.டன் உற்பத்தியில் 12.5 இலட்சம் மெ.டன் சாதனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.  இது மாநில உற்பத்தியில் 12.5 சதவீத பங்களிப்பாகும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.இதுவரை உணவு தானிய பயிர்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறன், உற்பத்தி குறித்து வேளாண்மை இயக்குநர் ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல், சிக்கன நீர்பாசனம், சீரிய இடுபொருட்களை பயன்படுத்துதல், நெல் வரப்பில் பயறு சாகுபடி செய்தல், கரும்பில் ஊடுபயிர் செய்தல் போன்ற உத்திகளை கையாள வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு வேளாண்மை இயக்குநர் தஷ்ணாமூர்த்தி,  அறிவுரை வழங்கினார்.முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திரவ உயிர் உர உற்பத்தி மையத்தில் உற்பத்தியினை துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள்.  தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பாக 13 பயனாளிகளுக்கு அரசு மானியத்தில் பவர் டில்லர்கள், ரொட்டாவேட்டர்கள், பாசனகுழாய்கள், விசைத்தெளிப்பான்கள், மழைத்தூவுவான்கள், சூரிய ஒளி விளக்குப்பொறி ஆகியவற்றை வழங்கினார்கள்.தொடர்ந்து, முகையூர் வட்டம் டி.கீரனூர் ஊராட்சியில், நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் மழைத்தூவுவான் மூலம் பாசனம் செய்யப்பட்டுள்ள மணிலா பயிரையும்,  வேங்கூர் ஊராட்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள கிழங்கு வகை மலைப்பயிர் - சம்மங்கி பயிரினையும், பன்னாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட்., யூனிட் சர்க்கரை ஆலையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நிழல்வலைக்கூடம் மற்றும் கரும்பு நாற்று உற்பத்தியினையும் வேளாண் இயக்குநர் தஷ்ணாமூர்த்தி,  மற்றும் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்நிகழ்ச்சிகளில், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ, கூடுதல் வேளாண்மை இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் கி.செல்வராஜ், வேளாண்மை துணை இயக்குநர்கள் சண்முகம், மோகன்தாஸ், மு.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வசேகர், வேளாண் அலுவலர் பி.சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சுப்பிரமணியன், கருணாநிதி, கனகலிங்கம் மற்றும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சேலம் மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து