ம.பி - யில் சரக்கு ரயில் விபத்து: 10 பெட்டிகள் தடம் புரண்டன

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      இந்தியா
train 2017 07 01

Source: provided

சத்னா :  மத்தியபிரதேசத்தில் சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதில் 10 பெட்டிகள் தடம்புரண்டன.

மத்திய பிரதேச மாநிலம் சத்னா என்ற பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மும்பை-ஹவுரா செல்லும் ரயில்பாதையில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. சத்னா ரீவா பகுதியில் ரயிலின் 13- வது பெட்டி திடீரென தடம் புரண்டது. இதையடுத்து பின்னால் இருந்த மேலும் 10 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டன.

தகவலறிந்த ரயில்வே மீட்பு படையினர் தண்டவாளத்தை இரவோடு இரவாக சீரமைத்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  விசாரித்து வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து