உணவகம், மருத்துவமனை, பள்ளி மற்றும் சந்தை விற்பனையாளர் சங்கத்திற்கு பாராட்டு சான்றிதழ்கள் மதுரை ஆணையாளர் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      மதுரை
mdu corparation 11 2 18

 மதுரை - மதுரைமாநகராட்சி பகுதிகளில் தூய்மைக்கான போட்டியில் சிறந்து விளங்கிய உணவகம், மருத்துவமனை, பள்ளி மற்றும் சந்தை விற்பனையாளர் சங்கத்திற்கு பாராட்டு சான்றிதழ்களை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில்   வழங்கினார்.
தூய்மையான நகரங்களுக்கான கணக்கெடுப்பு              மதுரை மாநகராட்சியில் பிப்ரவரி 12 முதல் 14 ஆம் தேதி  வரை நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் தூய்மையான உணவகம், மருத்துவமனை, பள்ளி மற்றும் சந்தை விற்பனையாளர் சங்கம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தூய்மையாக பராமரித்தல் மற்றும் அங்கு உருவாகும் மட்கும் குப்பைகளை அங்கேயே இயற்கை உரமாகவும், இயற்கை எரிவாயுவாகவும் சிறப்பான முறையில் செயல்படுத்திய டெம்பிள் சிட்டி உணவகத்திற்கும், மீனாட்சி மிஷின் மருத்துவமனைக்கும், அத்தியபனா பள்ளிக்கும் மற்றும் பழங்காநத்தம் உழவர் சந்தைக்கும் தூய்மைக்கான பாராட்டு சான்றிதழ்களை ஆணையாளர்   வழங்கி பாராட்டு தெரிவித்தார். 
 இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர்  சதீஷ் ராகவன், உதவி நகர்நல அலுவலர்  .பார்த்திபன், மக்கள் தொடர்பு அலுவலர் .சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து