முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

Source: provided

துபாய் :  மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி துபாயில் இந்து கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அபுதாபியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மூவர்ணக் கொடியை குறிக்கும் வகையில் பல்வேறு கட்டிடங்கள் மின் விளக்குகள் மின்னின.

அபுதாபியில் பட்டத்து இளவரசர் அல் நெஹாயானுடன் இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். அதையடுத்து, ரயில்வே, எரிசக்தி, நிதி உள்ளிட்ட துறைகளில் இளவரசருடன் 5 ஒப்பந்தங்களை செய்து கொண்டார்.

இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக துபாயில் இந்து கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். போகசன்வாசி ஸ்ரீஅக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயணன் கோயில் துபாய் நகரில் காட்டப்படுகிறது.

மேலும் துபாயில் இந்து கோயில் கட்டப்படுவதற்கு 125 கோடி இந்தியர்கள் சார்பில் இளவரசருக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து