முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது : இரு தமிழ் திரைப்படங்கள் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      சினிமா
Image Unavailable

Source: provided

பெங்களூரு :  பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் 10-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக சர்வதேச அளவில் 800 திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக 60 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழில் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட் திரைப்படமும், பிரசன்னா ராமசாமி இயக்கிய எழுத்தாளர் அசோக மித்ரன் என்கிற ஆவண திரைப்படமும் திரையிடப்பட உள்ளன.

சர்வதேச, ஆசிய, இந்திய, கன்னட ஆகிய 4 பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் படங்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல்வர் சித்தராமையா விருது வழங்குவார். தாய்லாந்து, ஜெர்மனி, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுகின்றன. தமிழில் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட் திரைப்படமும், பிரசன்னா ராமசாமி இயக்கிய எழுத்தாளர் அசோக மித்ரன் என்கிற ஆவண திரைப்படமும் திரையிடப்பட உள்ளன.

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் குறித்த ஆவணப்படம், கருத்துரிமை தொடர்பான 2 ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. விழாவில் திரைத்துறை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது. இவ்வாறு கர்நாடக மாநில செய்தித் துறை செயலர் பங்கஜ் குமார் பாண்டே செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து