ரஜினி, கமல் அரசியலில் எனக்கு ஜூனியர்கள்: விஜயகாந்த்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      சினிமா
vijayakanth(N)

சென்னை : ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சினிமாவில்தான் தமக்கு சீனியர்ஸ். அரசியலில் ஜூனியர்ஸ்தான் என்று கூறியிருக்கிறார் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த். சென்னை அம்பத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது,

நீட் தேர்வு வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.கவைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் கையும் ஊன்ற முடியாது. காலும் ஊன்ற முடியாது. பா.ஜ.க ஊன்றும்போது பார்த்துக் கொள்ளலாம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சினிமாவில் எனக்கு சீனியர்கள்தான். ஆனால் அரசியல் கட்சி தொடங்குவதில் எனக்கு ஜூனியர்ஸ். அதை ஏன் யாரும் எழுதுவதில்லை? இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து