குளிர்கால ஒலிம்பிக் போட்டி: முதல் தங்கத்தை வென்றது சுவீடன்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      விளையாட்டு
Sweden won gold 2018 2 11

சியோல் : குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை சுவீடன் நாட்டின் கிராஸ் கன்ட்ரி ஸ்கையர் வீராங்கனையான சார்லோட் கல்லா வென்றார்.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவின் பியாங்சங் நகரில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. நேற்று 5 பிரிவுகளில் தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற்றன. மகளிருக்கான ஸ்கையத்லான் கிராஸ் கன்ட்ரி போட்டியில் சுவீடன் வீராங்கனை சார்லோட் கல்லா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பியாங்சங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பறிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சார்லோட் கல்லா. வெள்ளிப் பதக்கத்தை நார்வே நாட்டின் மரிட் பிஜோர்ஜெனும், வெண்கலப் பதக்கத்தை பின்லாந்தின் கிறிஸ்டா பர்மகோஸ்கியும் கைப்பற்றினர்.

ஆடவருக்கான ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் தென் கொரியாவின் லிம் ஹயோ ஜூன் தங்கப் பதக்கம் வென்றார். நெதர்லாந்தின் சின்கி வெள்ளிப் பதக்கமும், ரஷ்யாவின் செமன் எலிஸ்டிரடோவ் வெண்கலப் பதக்கமும் வென்றனர். மகளிருக்கான பையத்லானில் ஜெர்மனி வீராங்கனை லாரா டேஹல்மேயர் தங்கப் பதக்கமும், நார்வேயின் மார்ட்டே வெள்ளிப் பதக்கமும், செக் குடியரசின் வெரோனிகா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


ஹாக்கி

மகளிருக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் நெதர்லாந்தின் கர்லிஜின் தங்கப் பதக்கம் வென்றார். அதே நாட்டைச் சேர்ந்த ஐரீன், அன்டோனியெட் டி ஜாங் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். மகளிருக்கான ஐஸ் ஹாக்கியில் ஒருங்கிணைந்த் கொரியா அணி தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் மோதியது. இதில் கொரியா 0-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து