குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரும் டிடிவி தினகரன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      இந்தியா
Delhi-High-Court 2018 01 23

உள்ளாட்சிச் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது புதிய பெயரில் இயங்கவும், குக்கர் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் எனக் கோரி டி.டி.வி. தினகரன் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் பிரமாணப் பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து