மாட்டுத்தாவணி முதல் சர்வேயர் காலனி வரையுள்ள 120 அடி சாலை சீரமைக்கும் பணி ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      மதுரை
mdu corparation 12 2 18

மதுரை -மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 மாட்டுத்தாவணி முதல் சர்வேயர் காலனி வரையுள்ள 120 அடி சாலை சீரமைக்கும் பணியினை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 மாட்டுத்தாவணி முதல் சர்வேயர் காலனி வரையுள்ள 120 அடி சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சாலையின் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திற்கு எதிரே சாலையின் தொடக்கத்தில் உள்ள பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் கட்டுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் உள்ள பொது கழிப்பறைகள், கட்டண கழிப்பறைகள் ஆகிய கழிப்பறைகளை பார்வையிட்டு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்குமாறு கூறினார். மேலும் பேருந்து நிலைய பகுதிகளில் சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்தார். பெரியார் பேருந்து நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதூர் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள காய்கறி கழிவுகளை அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள உரக்கூடத்தில் சேர்க்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் காய்கறி சந்தையில் மேற்கூரையில் போடப்பட்டுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
 இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்கள் .அரசு, திரு.பழனிச்சாமி, கௌசலாம்பிகை, உதவி நகர்நல அலுவலர்  .பார்த்திபன், உதவி ஆணையாளர் (வருவாய்)  .ஆ.ரெங்கராஜன், செயற்பொறியாளர்கள்  ராஜேந்திரன், திரு.சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், சுகாதார அலுவலர்கள்; திரு.சிவசுப்பிரமணியன்,  .ராஜ்கண்ணன், விஜய குமார், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து