அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      காஞ்சிபுரம்
kanchi 2

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் உத்திரமேரூரில் நேற்று நடைப்பெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். காஞ்சி மேற்கு மாவட்டம் கழக செயலாளர் வாலாஜபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தனர்.

அன்னதானம் 

ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, இளைஞரணி நிர்வாகி சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் ஏ.ராஜாமணி வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் அம்மாவின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடுவது, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்குவது, அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


இக்கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் இரா.கமலக்கண்ணன், முன்னாள் துணைத்தலைவர் அ.ரவிசங்கர், துரைபாபு, புலியூர் பழனி, அ.பி.சத்திரம் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து