செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் ஆன்மீக பொதுகூட்டம்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      வேலூர்
chengam photo 2

செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் ஆன்மீக பொதுகூட்டம் நடைபெற்றது. சுவாமி விவேகானந்தரின் வெளிநாட்டு சீடர் சகோதரி நிவேதிதை 150வது பிறந்தநாள் ரத ஊர்வலம் செங்கத்தில் நடைபெற்றதை தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ஆன்மீக பொதுகூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் அகரி வெங்கடாஜலபதி தலைமைதாங்கினார்.

பொதுகூட்டம்

செங்கம் ஒன்றிய அதிமுக செயலாளரும் மாவட்ட வணிகவரி ஆலோசனைக்குழு உறுப்பினருமான ஆர்.மதியழகன் முன்னிலை வகித்தார் பள்ளி தலைவர் பாண்டுரங்கன் வரவேற்றுபேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம செயலாளர் யதீஸ்வரி அனந்தப்ரேமப்ரியா அம்பா பேசினார் அப்போது நமது நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி வருபவர்களே வந்தபிறகு நமதுநாட்டை குப்பை நாடு என்கிறார்கள். ஆனால் அந்த குப்பையை இங்கிருந்தபோது தான் போட்டிருப்பார்கள் ஆனால் வசதியான நாட்டில் இருந்து வசதியற்ற நாட்டிற்கு வருகைதந்து இந்தியா புன்னியபூமி இங்கே பிறக்க தவம் செய்யவேண்டும் என்ற சுவாமி விவேகானந்தர் கருத்துப்படி இந்திய பெண்களின் சமூக பொருளாதார கல்வி கலாச்சார முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் நிவேதிதா அவர் வழியில் பெண்கள் தான் மகத்தானவர்கள் என்பதை உணரவேண்டும். என அவர் பேசினார். விழாவினை வாழ்த்தி ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வீ.மதியழகன் பேசினார். முடிவில் பள்ளி செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளை பொருளாளர் ஜம்புகுமார் ஜெயின் உள்ளிட்ட நிர்வாகிகள் நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கோலாப்பாடி அருணை வித்யா கலை அறிவியல் கல்லூரி முறையாறு மீனாட்சி கல்வியியல் கல்லூரி செங்கம் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புதுப்பாளையம் சாரதா மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் விவேகானந்தா சேவாசங்கம் சாரதை சேவாசங்கம் நிர்வாகிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து