முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்காலத்தில் தொழுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை: கலெக்டர் சி.கதிரவன் பேச்சு

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் - தொழு நோய் உள்ளவர்களை கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக விருதுகள் வழங்கப்படும்.என கலெக்டர் சி.கதிரவன் பேசினார்

உறுதி மொழி

கிருஷ்ணகிரி மாவட்டம் பொது சுகாதாரத்துறை, தேசிய தொழுநோய் திட்டம் சார்பாக ஸ்பர்ஷ் தொழுநோய் திட்டம் சார்பாக ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தல் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டு நன்கு குணமடைந்தவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் இன்று ( 12.02.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நல கல்வியாளர் வி.ராஜாமணி வரவேற்புரையும், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு. அசோக்குமார், துணை இயக்குநர் ( சுகாதாரபணிகள்) மரு.பிரியாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். துணை இயக்குநர் மருத்துவ பணிகள் ( தொழுநோய்) மரு.ஆர்.புவனேஸ்வரி விளக்கவுரையாற்றினார்.

பின்பு கலெக்டர் ; பேசும்பொழுது:

தொழுநோய்யானது மைக்கோ பாக்டிரியம் லெப்ரே என்ற கிருமியால் பரவக்கூடியது. மனிதர்களுக்கு உணர்ச்சியற்ற தேமல், படை, அரிப்பு போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லூரி மாணவ மாணவியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள அரசு மருத்துவ மனை அல்லது அரசு ஆராம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுருத்தவேண்டும். அவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழுநோய் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக விருதுகள் வழங்கப்படும். தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு வகையான நலதிட்டங்களையும் உதவிகளையும் வழங்கி வருகிறது. அதேபோல பிஸியோதெரபி சிகிச்சையும் அளித்து வருகிறது. ஸ்பர்ஷ் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் முழுவதும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 1500 வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் தொழுநோய் இல்லாத மாவட்டமாக நாம் உருவாக்க நடவடிக்கை எடுப்பதோடு அவற்றை தவிர்க்கும் வகையில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம் என கலெக்டர் சி.கதிரவன் பேசினார்.

இந்நிகழ்ச்சின் போது அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் பி.இரவிக்குமார், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சி.திருமணி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து