முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று துவக்கிவைத்தார்.

ஸ்டார் 2.0 - திட்டம்...

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

பதிவுத்துறை சார்பில் 176 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான "ஸ்டார் 2.0" திட்டத்தினையும், அதற்காக மேம்படுத்தப்பட்ட www.tnreginet.gov.in என்ற இணையதளத்தையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் தங்களது ஆவணப் பதிவு தொடர்பான தேவைகளை விரைவாக பூர்த்தி செய்து கொள்ள ஏதுவாக ஒருங்கிணைந்த இணையதள அடிப்படையிலான மென்பொருள் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, 176 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான "ஸ்டார் 2.0" திட்டத்தையும், அதற்காக மேம்படுத்தப்பட்ட
இணையதளத்தையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.

பல்வேறு வசதிகள்...

இத்திட்டத்தின் மூலம், எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் தாங்களாகவே இணையவழி ஆவணங்களை உருவாக்கும் வசதி, உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்பே இணையவழியாக அனுப்பி சரிபார்க்கும் முறை, அலுவலக வருகைக்கு முன்பதிவு செய்யும் வசதி, ஆவணங்களை 10 நிமிடத்தில் பதிவு செய்து ஒரே வருகையில் திரும்ப வழங்கும் வசதி, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக உடனுக்குடன் ஆவண நிலை பற்றிய தகவல் தெரிவிக்கும் வசதி, இணைய வழி கட்டணம் செலுத்தும் முறை, ஆவணப்பதிவின்போது மோசடிப்பத்திரப் பதிவுகளை தவிர்க்க முந்தைய ஆவணதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அவரின் கைரேகையை ஒப்பீடு செய்து ஆள்மாறாட்டத்தை தடுக்கும்

புதிய வசதி, கட்டணமில்லா தொலைபேசி வழி பொதுமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வசதி, பதிவுக்குப்பின் பட்டாமாறுதல் மனுக்களை இணையவழி உடனுக்குடன் வருவாய்த்துறைக்கு அனுப்பி பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஒப்புகை சீட்டு அனுப்பும் புதிய நடைமுறை, இணையவழி கட்டணமில்லா வில்லங்கச்சான்று பதிவிறக்கம் செய்யும் வசதியானது 30 ஆண்டுகளிலிருந்து 42 ஆண்டுகளாக நீட்டிப்பு (1975 முதல்), இணையவழி மின்கையொப்பமிட்ட ஆவண நகல் மற்றும்

வில்லங்கச்சான்று பெறும் வசதி போன்ற வசதிகளை பொதுமக்கள் பெற்று பயன்பெற முடியும்.

இந்த நிகழ்ச்சியில், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.சந்திரமௌலி, பதிவுத்துறை தலைவர் .ஜெ.குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து