முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் இளம் பெண்ணின் கண்ணிலிருந்து 14 புழுக்கள் அகற்றம்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு கண்களில் அரிய வகை நோய் ஏற்பட்டுள்ளது. அவரது இடது கண்ணிலிருந்து 14 புழுக்கள் அகற்றப்பட்டுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் புழுக்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. அது குறித்து இப்போதுதான் விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அபே பெக்லி என்ற பெண்ணுக்கு 'டெலாசியா குலோசா' என்ற அரிய வகை நோய் தாக்கியது. பொதுவாக இந்நோய் அமெரிக்காவின் வட பகுதியில் உள்ள கால்நடைகளைத் தாக்கும் கண் நோயாகும். இந்நோய் இதற்கு முன்னதாக மனிதர்களைத் தாக்கியதில்லை. இதுவே முதன்முறையாகும் எனவும் விஞ்ஞானிகள் கூறினர்.

ஓரேகானில் உள்ள கோல்டு கடற்கரை பகுதிக்கு சென்ற அபே பெக்லி குதிரையேற்றம் மற்றும் மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அங்கிருந்து ஊர் திரும்பிய அபேவுக்கு ஒரே வாரத்துக்குப் பின்னர் இடது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் கண்ணில் புழு ஒன்று நெளிவதைக் கண்டு அவர் அதிர்ந்துள்ளார். அந்தப் புழுவை அவரே வெளியே அகற்றியுள்ளார். ஒரு இன்ச் நீளத்துக்கு அந்தப் புழு இருந்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் மேலும் சில புழுக்கள் அவர் கண்ணில் இருந்து வெளியேறியுள்ளன. பின்னர், மருத்துவர்கள் அவர் கண்ணில் இருந்து மொத்தமாக 14 புழுக்களை அகற்றினர். அதன் பின்னர் இதுவரை அவர் கண்ணில் எந்தப் புழுவும் வரவில்லை.

இவ்வகை புழுக்கள் கண்ணில் உள்ள ஈரத்தன்மையைப் பயன்படுத்தி வளரக்கூடியது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வகை புழுக்கள் மாட்டு தொழுவங்களில் உள்ள ஒருவகை ஈக்கள் மூலம் பரவும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து