மும்பை தாக்குதலின் போது மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது தீவிரவாதி: பாகிஸ்தான் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      இந்தியா
HAFIZSAEED 2017 10 20

புதுடெல்லி: கடந்த 2008 மும்பை தாக்குதலின் போது மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையதை தீவிரவாதி என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தான் போலீசார் ஹபீஸ் சையதின் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைமையகம் அருகே போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தியுள்ளனர். அண்டை நாடான, பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவனாகவும் உள்ளான் ஹபீஸ் சையது. மும்பையில், 2008ல் நடந்த தாக்குதலின் மூளையாகக் கருதப்படும், ஹபீஸ் சையீதை, தேடப்படும் குற்றவாளியாக, ஐ.நா., அறிவித்து உள்ளது. லஷ்கர்-ஈ-தொய்பா, ஜமாத்-உத்-தவா மற்றும் ஹர்கட்-உல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐநா தடை விதித்துள்ளது. ஐநா பட்டியலில் மொத்தம் 27 தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் உள்ளன. ஹபீஸ் சையதை தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையம் ஹபீஸ் சையதை அந்த நாடு தீவிரவாதியாக அறிவித்து சட்டம் கொண்டு வந்துள்ளது உண்மைதான் என்று தெரிவித்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் சட்டம் ஹபீஸ் சையதை தீவிரவாதி என்றும் ஜமாத் உத் தவா அமைப்பை தீவிரவாத அமைப்பாகவும் அறிவித்துள்ளது.

ஐநாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அலுவலகங்கள் மற்றும் வங்கிக்கணக்குகளை முடக்கவும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

COCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து

Funny Golden Retriver demanding to pat repeatedly and she loves it!!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து