முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.10 லட்சம் கார் காணிக்கை

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு விஐபி பக்தர்கள் தங்க, வைர கிரீடங்களையும், தங்கக்காசு, ஆரம், கடையங்கள், தங்க பாதங்களையும் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும், சிலர் திருமலை, திருப்பதி தேவஸ்தானத்துக்கு அன்னதானம், கோ தானம், பிராண தானம் உள்ளிட்ட பல திட்டஙகளுக்கு காணிக்கை அளித்து வருகின்றனர். இதில், ஏழுமலையானுக்கு வரும் உண்டியல் காணிக்கையில் வரும் வட்டிப்பணத்தில் மட்டுமே தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, கார், பைக் உற்பத்தி நிறுவனத்தினர் மற்றும் டீலர்கள் புதிதாக அறிமுகமாகும் கார், பைக்குகளை முதலில் ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது போன்று காணிக்கையாகக் கிடைக்கும் வாகனங்களைத் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அனந்தபூரைச் சேர்ந்த ஸ்ரீ துர்கா ஆட்டோமோட்டிவ் நிறுவன உரிமையாளர் வெங்கடேஸ்வர ராவ், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மாருதி எர்டிகா மாடல் புதிய காரை ஏழுமலையானுக்கு திருமலையில் வழங்கினார். இதனைக் கோயில் இணை நிர்வாக அதிகாரி ஹரித்ர நாத் பெற்றுக்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தார். ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ.1000 கோடி வருவாய் கிடைக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து