அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணலில் வென்றவர்களுக்கு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      சென்னை
G punid

அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் நடத்திய வேலை வாய்ப்பிற்கான வளாக நேர்காணலில் வென்று புகழ்பெற்ற இன்போஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்ற கிராமப்புற பொறியியல் மாணவர்களான டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பாராட்டு விழா  

 மிழக அளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கிராமப்புறத்தில் இருந்து வந்து கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் மாணவி .அனிதா, மின்னனு தொலை தொடர்பு பொறியியல் மாணவி ஜி.மீனாட்சி ஆகியோர் பங்கேற்றனர்.இவர்கள் இருவரும் பல்வேறு கட்ட தேர்வுகளில் வென்று இன்போசிஸ் நிறுவனத்தில் பணி செய்ய தேர்வு செய்யப்பட்டனர்.தொடர்ந்து இந்த மாணவிகளுக்கு டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி மாணவர்களை ழ்த்தியதோடு,கிராமப்புறத்தில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களாலும் புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற முடியும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.நிகழ்வில் கல்லூரி முதல்வர் பழனி, கணினி பொறியியில் துறை தலைவர் ஜனார்த்தனம், மின்னனு தொலைதொடர்பு பொறியியல் துறை தலைவர் ஜெயஅனுசுயா வேலை வாய்ப்பு அலுவலர் பரணிதரன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து