இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மன நல விழிப்புணர்வு முகாம்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
red cross 13 2 18

ராமநாதபுரம்-- ராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியும் ராமநாதபுரம் மாவட்ட மன நல திட்டம் இணைந்து நடத்திய  “மன நல விழிப்புணர்வு முகாம்” சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர்  முனைவர்  தேவ மார்ட்டின் மனோகரன் தலைமையில் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது. 110 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.  கல்லூரியின்  துணை முதல்வர் எ. ஆனந்த் வரவேற்றார். ரெட் கிராஸ் துணைத் தலைவர் ஹாஜி அன்வர்தீன் மனநலம் சார்பான கருத்துக்களை தெரிவித்தார்  
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன நல மருத்துவர்  பெரியார் லெனின் உடல் ஆரோக்கியம் என்பது நோயற்ற தன்மையை குறிப்பதாகும். ஆனால் மன ஆரோக்கியம் அடைய   ஒவ்வொருவரும் தன்னுடைய உண்மையான திறன் அறிதல் மன அழுத்த நிகழ்வுகளை எதிர் கொள்ளுதல் தான் சார்ந்த பணிகளை திறம்பட செய்தல்   மற்றும் சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பு அளித்தல் ஆகியவற்றை செய்யவேண்டும் என்று தெரிவித்தார். சக்திக்கு மீறிய எதிர்பார்ப்புகளுடன் செயல்படும் போது ஏமாற்றம் ஏற்பட்டு அதனால் மன அழுத்தம்  ஏற்படுகிறது என்பதனை  உதாரணங்களுடன் விளக்கினார். மேலும் எண்ணம்இ செயல் மற்றும்  திறன் ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருந்தால் மன அழுத்தம் ஏற்படாது  என்பதனை விவரித்தார்.  உதவிப் பேராசிரியர் பி. கோபால கிருஷ்ணன் நன்றி கூறின்னார். மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் முகாமிற்கான ஏறபாடுகளைச் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து