முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சியினை தேனி கலெக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்து பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      தேனி
Image Unavailable

தேனி.- தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயிலில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு (மகளிர் திட்டம்) நிறுவனத்தின்  சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், துவக்கி வைத்து பார்வையிட்டார்.
துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில்,
 தமிழக அரசு கிராமப்புறங்களில் வாழ்கின்ற இளைஞர்கள், ஆதரவற்றவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றிட பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனிநபர் வருமானத்தைப் பெருக்குவதினால் குடும்ப பொருளாதாரம் உயரும், குடும்பப் பொருளாதாரம் உயர்ந்தால் ஒரு கிராமத்தின் பொருளாதாரமும், அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும் என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம் (மகளிர் திட்டம்)த்தின் மூலம்; கிராமப்புறங்களில் வாழ்கின்ற கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு தொழில் சார்ந்த பயிற்சியளித்து, தொழில் தொடங்கிட தேவையான உதவிகளைச் செய்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்திடும் பொருட்டு, பொதுமக்கள் உற்பத்தி பொருட்களை எளிதில் வாங்கி பயன்பெறும் வகையில், மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான விழாக்கள், நிகழ்ச்சிகளில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டு, கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி (13.02.2018) முதல் (20.02.2018) வரை நடைபெறவுள்ளது.
இந்த விற்பனை கண்காட்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிகுழுக்கள் மற்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களை கொண்டு 30 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்த்தி செய்யப்பட்ட செயற்கை அணிகலன்கள், அழகிய துணிப்பைகள், வாசனை திரவியங்கள், மென்பொம்மைகள், மகளிருக்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்கள், பரிசுப்பொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள், கைத்தறி புடவைகள், மூலிகை திரவியங்கள், கலைநயம் மிக்க ஒவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்டவை தரமானவையாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்யப்படுவதால் மகளிர் சுய உதவிக்குழுவினரை ஊக்கப்படுத்தும் விதத்தில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  சேதுராமன்   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்  செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்)  கருப்பையா , உதவித்திட்ட அலுவலர்  .முருகேசன்  , பெரியகுளம் வட்டாட்சியர்  .கிருஷ்ணகுமார்  , வட்டார வளர்ச்சி அலுவலர்கள்   தனலெட்சுமி  ,  .ஜெகதீஸ்  , தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர்  .மாரியப்பன்  , உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து