இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தீ விபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் - முதல்வர் எடப்பாடி அதிகாரிகளுக்கு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      தமிழகம்
cm edpadi order to officials 2018 2 13

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வுக்கூட்டத்திற்கு பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

தணிக்கை செய்ய...

முதல்வர் எடப்பாடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அம்சங்கங்கள் வருமாறு:-

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக முதுநிலை அந்தஸ்துடைய பெரிய திருக்கோயில்களில் தீ தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும். அத்தணிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் அதற்கான நிதித் தேவை குறித்து அறிக்கையினை தயார் செய்ய வேண்டும். அவ்வறிக்கையினை தலைமைச் செயலாளர் தலைமையில், சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களைக் கொண்டு அமைக்கப்படவுள்ள குழுவிடம் 2 வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்.

மின் இணைப்புகள்...

அவ்வறிக்கையினை,  மேற்கண்ட குழு பரிசீலித்து, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தனது பரிந்துரைகளை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். உடனடி பாதுகாப்பு கருதி, கோயில் வளாகத்திற்குள்ளும், கோயில் மதில்சுவரை ஒட்டியும் அமைந்துள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்றிட வேண்டும். மேலும், அவ்வாறு அகற்றப்பட்ட கடைகளை வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள முதுநிலை அந்தஸ்துடைய பெரிய திருக்கோயில்களில் அமைந்துள்ள புராதன சிற்பங்கள், கல்தூண்கள், கட்டுமானங்கள் ஆகியவைகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம், பாதுகாப்பான மற்றும் தரமான மின் இணைப்புகளை அமைக்க வேண்டும். 

அறிவிப்பு பலகைகள்...

மேலும், திருக்கோயில்களில்  விளக்கு ஏற்றுவதற்காக  பக்தர்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய் ஆகியவற்றை  ஓரிடத்தில் சேகரித்து வைத்து, அதனையே திருக்கோயில்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும், திருக்கோயில் வளாகத்தில் இதைப் பற்றிய அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.  முதுநிலை அந்தஸ்துடைய பெரிய திருக்கோயில்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வினை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொண்டு, தீ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்கள் சரியாக உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும். 

தீ அணைப்பு வாகனம்...

முதுநிலை அந்தஸ்துடைய பெரிய திருக்கோயில் வளாகங்கள் அல்லது அவற்றின் அருகாமையில் ஒரு தீ அணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தீ அணைப்பு உபகரணங்களான தீ அணைப்பான்கள், நீர்தும்பிகள், மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள் ஆகியனவற்றை அவ்வப்பொழுது பரிசோதனை செய்து, எந்த நேரத்திலும் இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும். திருக்கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அதனை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான அளவில் தொழில்நுட்ப  மற்றும் இதர பணியாளர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யவும்,  திருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய காவலர்களை பணியமர்த்த தேவையான ஏற்பாடுகளை செய்யவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த ஆய்வுக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.சாய்குமார், பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளர்  எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறை செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மற்றும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் (கூடுதல் பொறுப்பு) இரா.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆர்.ஜெயா, காவல் துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர்  மகேந்திரன், சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் அ.கா.விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

உடனடி பாதுகாப்பு கருதி, கோயில் வளாகத்திற்குள்ளும், கோயில் மதில்சுவரை ஒட்டியும் அமைந்துள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்றிட வேண்டும். கோயில்களில் புராதன சிற்பங்கள், கல்தூண்கள், கட்டுமானங்கள் ஆகியவைகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம், பாதுகாப்பான மற்றும் தரமான மின் இணைப்புகளை அமைக்க வேண்டும்.

தீ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்கள் சரியாக உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும். திருக்கோயில் வளாகங்கள் அல்லது அவற்றின் அருகாமையில் ஒரு தீ அணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். திருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய காவலர்களை பணியமர்த்த வேண்டும்.

California fire looks like hell on earth | கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து