தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள்: பார்முக்கு வந்த ரோகித் சதம் அடித்தார்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      விளையாட்டு
rohit sharma 2018 2 13

தென்ஆப்பிரிக்கா தொடரில் திணறி வந்த ரோகித் சர்மா, நேற்றைய ஆட்டத்தில் 50 பந்தில் அரைசதம் அடித்தார். 9 இன்னிங்சில் முதல் சதம் இதுவாகும்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 எனத் தொடரை இழந்தது. முதல் இரண்டு போட்டியிலும் களம் இறங்கிய ரோகித் சர்மா ரன் அடிக்க திணறினார். இதனால் 3-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.

தவான் அதிரடி...


தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதிலும் சரியாக ரோகித் சர்மா விளையாடவில்லை. நேற்று 5-வது ஒருநாள் ஆட்டம் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வழக்கமாக ரோகித் சர்மாதான் முதல் பந்தை எதிர்கொள்வார். ஆனால் இன்று தவான் எதிர்கொண்டார். தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். முதல் 15 பந்தில் 1 ரன் எடுத்திருந்தார். 16-வது பந்தில் பவுண்டரி அடித்தார். அதன்பின் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சதம் அடித்து....

6-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் இமாலய சிக்சர்  விளாசினார். 11-வது ஓவரை நிகிடி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஒரு சிக்ஸ் விளாசினார். நிகிடி வீசிய 15-வது ஓவரில் ஒரு பவுண்டரியும், 7-வது ஓவரில் ஒரு பவுண்டரியும் அடித்தார். 18-வது ஓவரை டுமினி வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளில் விளாசினார். 19-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் அடித்து 50 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் தொட்டார். 9 இன்னிங்சில் ரோகித் சர்மாவின் முதல் அரைசதம் இதுவாகும். பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 126 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து நிகிடி பந்தில் அவுட்டானார். இதில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். 8 இன்னிங்சில் மோசமாக விளையாடி பின்னர் தற்போது பார்முக்கு வந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து