இலங்கை உள்ளாட்சி தேர்தலால் பிரதமர் ரணிலுக்கு நெருக்கடி

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      இலங்கை
ranil 2018 01 14

கொழும்பு: இலங்கையில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் பொதுஜன பெரமுனா கட்சி அமோக வெற்றி பெற்றது.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் அதிபர் சிறிசேனாவின் சுதந்திர கட்சி யும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. ரணிலின் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 105 உறுப்பினர்கள் உள்ளனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் ரணில் பதவி விலக வேண்டும் என்று அதிபர் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைக் கோரியிருப்பதாகத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து