என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினரிடம் ஆதாரம் இல்லை முன்னாள் பிரதமர் ஷெரிப் கருத்து

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      உலகம்
navas

இஸ்லாமாபாத்: என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினரிடம் ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறினார்.

வெளிநாட்டில் நான் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஆதாரங்கள் இல்லாததால், எனக்கு தண்டனைப் பெற்றுத்தர அவர்களால் முடியவில்லை.
- நவாஸ் ஷெரிப்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.

இந்நிலையில், வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக அவர் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

அதன் பின்னர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நவாஸ் ஷெரிப் கூறியபோது, “வெளிநாட்டில் நான் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஆதாரங்கள் இல்லாததால், எனக்கு தண்டனைப் பெற்றுத்தர அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாக, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சில குற்றச்சாட்டுகளை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்” என்றார்.

 

Funny Golden Retriver demanding to pat repeatedly and she loves it!!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து