மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      தமிழகம்
car 2018 01 14

சென்னை: சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் செல்லக் கூடாது என்பதற்காக காரை அவரது தாயே தீயிட்டு கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த ஆவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் தனது தாய் இந்திராணி மற்றும் மனைவி வைஜெயந்திமாலா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதற்கேற்ப மாமியார்- மருமகளிடையே பிரச்சனை ஏற்பட்டது. ராஜேந்திரன் தாயை தனியாக குடி வைத்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் ராஜேந்திரன் புது கார் வாங்கியுள்ளார். அந்த காரில் வைஜெயந்திமாலா உட்கார்ந்து செல்வது இந்திராணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அந்த காரை தீவைத்து கொளுத்த திட்டமிட்டார். நேற்று இரவு மகன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த காரை தீவைத்துக் கொளுத்தினார். இதில் வாகனத்தின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மர்மநபர்கள் தீவைத்து கொளுத்தியதாக நினைத்த போலீஸார் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மண்ணெண்ணெய் கேனுடன் இந்திராணி செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து இந்திராணியிடம் விசாரணை நடத்தியதில் காருக்கு தீவைத்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து