மின் ஆளுகைத் திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      இந்தியா
Ravi Shankar Prasad Electronics   Information Technology function  2018 02 14

புது டெல்லி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மின் ஆளுகை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி உதவியை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று டெல்லி மாநாட்டில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் விஞ்ஞான் பவனில் அனைத்து மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் மற்றும் அரசுச் செயலர்களுக்கான மாநாடு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமையில்  நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக அமைச்சர் மணிகண்டன், முதன்மைச் செயலர் டி.கே. ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது,

டிஜிட்டல் இந்தியா திட்டம் வெற்றியடைய தகவல் தொழில்நுட்பத் தொழில்கள் வளர்ச்சியுறுவதும், அதற்கான உள்கட்டமைப்பு வசதி, மின் ஆளுகை ஆகியவற்றை ஏற்படுத்துவதும் அவசியமாகிறது. இந்த விஷயங்களில் தமிழகம் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், மின் ஆளுகை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசுத் திட்டங்கள் மூலம் இதுவரை 37 லட்சம் மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு அரசுத் துறைகளின் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்புடைய சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் அனைத்துத் துறைகளையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதுதான் தமிழக அரசின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

Funny Golden Retriver demanding to pat repeatedly and she loves it!!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து