தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது - முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      தமிழகம்
TN assembly 2017 07 01

சென்னை : தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யவுள்ள நிலையில், இன்று அமைச்சரவைக் கூட்டம் நடக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இதுவரை 6 அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு 11-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கைகள், புதிய அறிவிப்புகள் மற்றும் நீட் விவகாரம், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்களின் விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், 16-ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து