ஆனைமடுவு நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      தமிழகம்
CM Edapadi1 2017 9 3

சென்னை : சேலம் மாவட்டம் ஆனைமடுவு நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து ஆற்றுப் பாசன மற்றும் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.


வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து அணையின் தலைமை மதகின் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதிகளுக்கு 15.2.2018 காலை 8.00 மணி முதல் 21.2.2018 காலை 8.00 மணி வரை ஒரு நாளைக்கு வினாடிக்கு 60 க.அடி வீதம் (5.18 மி.க.அடி) 6 நாட்களுக்கு 31.08 மி.க.அடிக்கு மிகாமலும், 21.2.2018 அன்று காலை 8.00 மணி முதல் அணையின் தலைமை மதகின் மூலம் வலதுபுறக் கால்வாய் பகுதிக்கு தினசரி வினாடிக்கு 35 க.அடி வீதம் (3.02 மி.க.அடி) மற்றும் இடதுபுறக் கால்வாய் பகுதிக்கு தினசரி வினாடிக்கு 15 க.அடி வீதம் (1.30 மி.க.அடி) ஆக மொத்தம் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தினசரி வினாடிக்கு 50 க.அடி வீதம் (4.32 மி.க.அடி) 6 நாட்களுக்கு சுழற்சி முறையில் மொத்தம் 25.92 மி.க.அடிக்கு மிகாமலும் சிறப்பு நனைப்புக்காக தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து