தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மாற்றங்கள் - கேப்டன் விராட் கோலி பேட்டி

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      விளையாட்டு
virat kohli interview 2018 2 14

போர்ட் எலிசபெத் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தொடரை வென்றது...

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு எதிராக 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.  5 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி, வரலாறு படைத்தது. 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி 5-வது ஒருநாள் போட்டியில் வென்று சாதனை படைத்தது. இந்திய அணி தொடரை வென்ற நிலையில், சம்பிரதாய ஆட்டமாக கடைசி மற்றும் 6-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வரும் 16-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது.

சில மாற்றங்கள்...

செஞ்சூரியனில் நடைபெறும் இந்த போட்டியில், இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்க கூடும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். விராட் கோலி கூறியதாவது:- இந்த தொடர் முடிந்த பிறகு, நாங்கள் எந்த இடத்தில் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்பதை பற்றி நிதானமாக அமர்ந்து யோசிப்போம்.
ஆலோசிப்போம்...

தற்போது, 4-1 என்பது மிகவும் பெரியதாக தெரிகிறது. 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற நாங்கள் நினைக்கிறோம். அடுத்த போட்டியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், வெற்றி பெறுவதற்குதான் அதிக முன்னுரிமை அளிப்போம். வெற்றி பெறுவதற்கான அனைத்தையும் நாங்கள் செய்வோம்.  பேட்டிங் வரிசையில் முதல் 3 வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடும்போது அதன்பின் வரும் வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் போகலாம். இந்த தொடர் முடிந்த பிறகு அதுபற்றி விவாதித்து எந்த இடத்தில் முன்னேற்றம் வேண்டும் என்று ஆலோசிப்போம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து