முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது ஒரு நாள் போட்டி: தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

போர்ட் எலிசபெத் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்தியா பேட்டிங்...

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத் நகரில் நடந்தது.  டாஸ் ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ராம் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்க ஆட்டக்காரரான தவான் 34 ரன்களில் (23 பந்து, 8 பவுண்டரி) ஆட்டமிழந்து வெளியேறினார்.  அணியின் ஸ்கோர் 153 ரன்களை (25.3 ஓவர்) எட்டிய போது கேப்டன் விராட் கோலி 36 ரன்களில் (54 பந்து, 2 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார்.  அடுத்து வந்த ரஹானேவும் (8 ரன்களில்) ரன்-அவுட் ஆனார்.

274 ரன்கள்...

அணியின் ஸ்கோர் 236 ரன்களை (42.2 ஓவர்) எட்டிய போது ரோகித் சர்மா (115 ரன், 126 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) நிகிடியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென்னிடம் கேட்ச் ஆனார். அவருக்கு பிறகு வந்த ஹர்திக் பாண்ட்யா (0) அதே ஓவரில் தாழ்வாக வந்த பந்தில் விக்கெட் கீப்பரிடம் சிக்கினார். ஸ்ரேயாஸ் அய்யர் 30 ரன்கள் (37 பந்து, 2 பவுண்டரி) மற்றும் டோனி 13 ரன்கள் (17 பந்து) எடுத்து வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்தது. புவனேஷ்வர்குமார் 19 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆம்லா 71 ரன்கள்...

இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி விளையாடியது.  அந்த அணியின் கேப்டன் மார்க்ராம் 32 ரன்னிலும், டுமினி 1 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 6 ரன்னிலும், டேவிட் மில்லர் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  ஆம்லா 71 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று கிளாசன் 39 ரன்களிலும், பெஹ்லுக்வாயோ 0 ரன்களிலும். ரபடா 3 ரன்களிலும், மோர்கெல் 1 ரன்களிலும் மற்றும் சாம்சி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.  நிகிடி 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.  அணியானது 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது.

தொடரை கைப்பற்றியது...

இதனால் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற்றுள்ளது.  இந்தியா 4-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையுடன் போட்டி தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றதில்லை என்ற நிலையை உடைத்து சாதனை படைத்தது. 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 16-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து