முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சு.நல்லூர் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் 78 பயனாளிகளுக்கு ரூ. 3.45 லட்சம் நலத்திட்ட உதவிகள்மாவட்ட வழங்கல் அலுவலர் வழங்கினார்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை வட்டம் சு.நல்லூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ. 3.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வழங்கல் அலுவலர் மு.அரிதாஸ் வழங்கினார்.

நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை வட்டம் சு.நல்லூர் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மு.அரிதாஸ் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆர்.ரவி, வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, மண்டல துணை தாசில்தார் முருகன் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 130 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 78 மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 42 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முகாமில் பட்டா மாறுதல், உட்பிரிவு சான்று, வீட்டு மனை பட்டா, சிறுகுறு விவசாய சான்று, குடும்ப அட்டை, விவசாயிகளுக்கான விதை மற்றும் இடுபொருள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் 78 பயனாளிகளுக்கு ரூ. 3.45 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன.

முகாமில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜி.வீரமணி, காட்டாம்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புவனேஸ்வரி, டாக்டர் கார்த்திக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.ராஜேந்திரகுமார், சுகாதார ஆய்வாளர் ஆர்.சேகர், வேளாண் உதவி அலுவலர் பழனி, நில அளவர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் டி.தேவிகா, ஏ.மோகன்குமார், சீனுவாசன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சாரதா நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து