முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாமி விவேகானந்தரின் சிஷ்யைசகோதரி நிவேதிதை ரத யாத்திரை விஐடியில் துணைத்தலைவர்ஜி.வி.செல்வம் மலர் தூவி வரவேற்பு

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      வேலூர்
Image Unavailable

சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரிநிவேதிதையின் ரத யாத்திரைக்கு விஐடியில்வரவேற்பு அளிக்கப்பட்டது. விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் ரதயாத்திரையைவரவேற்று ரதத்தில் அமைக்கப்பட்டுள்ளசுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதைசிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வரவேற்பு

சுவாமி விவேகானந்தர் 1895ம் ஆண்டில்லண்டனில் நிகழ்த்திய சொற்பொழிவைகேட்ட அயர்லாந்து நாட்டை சேர்ந்தமார்கரெட் எலிசபெத் என்ற பெண் 1898ம்ஆண்டில் இந்தியாவிற்கு வந்து சுவாமிவிவேகானந்தரிடம் பிரம்மச்சாரிய தீட்சைபெற்று நிவேதித்தையாக மாறினார்.இந்தியர்களுக்கு கல்விச் சேவையில்சகோதரி நிவேதித்தை தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கல்வி சேவை செய்து வந்தார்.

அவரது 150ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது சேவையை மக்கள்அறிந்துக் கொள்ளும் வகையில் நிவேதிதாரத யாத்திரை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம் 22ந் தேதிகோவையில் தொடங்கிய இந்த ரத யாத்திரைதமிழ்நாட்டில் 27மாவட்டங்களுக்கு செல்கிறது. அடுத்தமாதம் 22ந் தேதி முடிவடைகிறது.

வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தஇந்த ரத யாத்திரைக்கு விஐடியில் மாணவமாணவியர் பேராசிரியர்கள் மற்றும்ஊழியர்கள் சார்பில் வரவேற்புஅளிக்கப்பட்டது. விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் ரதத்தில் உள்ள சுவாமிவிவேகானந்தர் மற்றும் சகோதரிநிவேதித்தை சிலைகளுக்கு மாலைஅணிவித்து மலர் தூவி மரியாதைசெலுத்தினார்.அதனை தொடர்ந்து ரத யாத்திரை வரவேற்புநிகழ்ச்சி விஐடியில் உள்ள டாக்டர் சென்னாரெட்டி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குவருகை தந்தவர்களை விஐடி இணைதுணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன்வரவேற்றார

சமூக சேவை

நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் சிறப்புரையாற்றுகையில்கூறியதாவது:லன்டனில் பிறந்து சுவாமி விவேகானந்தரின்சொற்பொழிவுக்கு ஆட்பட்டு இந்தியாவிற்குவந்து இங்கேயே இந்திய மக்களுக்கு கல்விஉள்ளிட்ட சமுக சேவையில் ஈடுபட்டவர்சகோதரி நிவேதித்தை ஆவார். இங்கு அவர்ஆற்றிய சேவை தொப்புள் கொடி உறவைநமக்கு உணர்த்துகிறது.

பெண்களால் சாதிக்க முடியாத செயல்இல்லை என்று கூறலாம். ஒரு மாணவனிடம்ஆசிரியர் ஒருவர் கேட்டார். சிதம்பரம்போட்ட பட்ஜெட் நல்லதா இல்லை அருண்ஜெட்லி போட்ட பட்ஜெட் நல்லதா என்றகேள்விக்கு என் அம்மா போடும்பட்ஜெட்தான் சிறந்த பட்ஜெட் என்றுகூறினான். கணவன் வருமானத்திற்கு ஏற்பகுடும்பத்தை நடத்தி செல்லும் தன்மைகொண்டவர்கள் குடும்ப தலைவிகள்.

முன்பெல்லாம் திருமணத்தின் போதுஆணை விட பெண் 5 அல்லது 10 வயதுகுறைந்தவராக இருப்பார். இதற்கு அந்தவயதிலேயே பெண்கள் ஆண்களுக்குஇணையான தகுதியை பெண்கள்பெற்றுவிடுகிறார்கள் என்பதாகும். பெண்படித்தால் குடும்பமே படித்ததாக ஆகும்.

கல்வி கற்க வேண்டும்

பெண்கள் கல்வி கற்க வேண்டும் அதன்மூலம் சமுதாயத்தை காக்க வேண்டும்என்பதற்காக பெண் கல்வியின் அவசியத்தைஎடுத்து கூறி அவர்களுக்கு கல்வி சேவைவழங்கியவர் சகோதரி நிவேதித்தைஆவார்.நாட்டின் உயர்வில் எல்லோருக்கும்உரிமை உள்ளது அரசு செய்யும் என்றுநினைக்காமல் நாமே அதனை செய்வதுகடமையாக கொள்ள வேண்டும். நாடும்வீடும் சுத்தமாக இருக்க வேண்டும் அதோநமது மனதும்சுத்தமாக இருக்க வேண்டும் என்றுபேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொருளாதாரபுள்ளியியல் துறை முதன்மை செயலாளர்இறையன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றுபேசினார். இதில் ரத யாத்திரை குழுவினர்முனைவர் யுவரானி, பா.கார்த்தியாயினிஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து