பனிச்சறுக்கு போட்டி: அமெரிக்க வீரருக்கு தங்கம்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      விளையாட்டு
america player gold win 2018 2 14

தென்கொரியாவின் பியாங்சங் நகரில் பீனிக்ஸ் பனி பூங்காவில் பனிச்சறுக்கு போட்டியின் இறுதி சுற்று நேற்று நடந்தது.  இதில் அமெரிக்காவின் ஷான் ஒயிட் 97.75 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். குளிர்கால ஒலிம்பிக்கில் இது அவரது 3வது தங்கம் என்பதுடன் குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் அமெரிக்காவின் 100வது தங்க பதக்கம் ஆகும். 

கடந்த 2006 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வென்றுள்ளார். அவருக்கு அடுத்து 2வது இடத்தில் ஜப்பான் நாட்டின் அயுமு ஹிரானோ வெள்ளி பதக்கமும் மற்றும் 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்காட்டி ஜேம்ஸ் வெண்கல பதக்கமும் வென்றனர். இதுவரை நடந்த 4 பனிச்சறுக்கு போட்டிகளிலும் அமெரிக்கா தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து