முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்க டி-20 அணிக்கு டுமினி கேப்டனாக நியமனம்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

போர்ட் எலிசபெத் : இந்தியாவுக்கு எதிரான 20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி கேப்டனாக டுமினி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

டு பிளிஸ்சிஸ் காயம்...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நிறைவடைந்ததும் அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி மோத உள்ளது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 18-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது. 20 ஓவர் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விரலில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ஏற்கனவே விலகி விட்டார். அவருக்கு பதிலாக டுமினி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கிறிஸ்டியான் ஜோங்கர், ஜூனியர் டாலா, ஹென்ரிச் கிளாசென் ஆகிய புதுமுகங்களும் தேர்வாகி உள்ளனர்.ஒரு நாள் தொடரின் பொறுப்பு கேப்டன் மார்க்ராம், அம்லா, இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்க வீரர்கள்

டுமினி (கேப்டன்), பெஹர்டைன், ஜூனியர் டாலா, டிவில்லியர்ஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், கிறிஸ்டியான் ஜோங்கர், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பேட்டர்சன், ஆரோன் பாங்கிசோ, பெலக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, ஜான் ஸ்மட்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து