முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகினார் ஜேக்கப் ஜூமா

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்க அதிபர் பதவியில் இருந்து சொந்த கட்சியினரின் எதிர்ப்பினால் ஜேக்கப் ஜூமா விலகினார்.

ஊழல் குற்றச்சாட்டு...
தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க நேசனல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  அக்கட்சியை சேர்ந்த ஜேக்கப் ஜூமா அதிபராக இருந்த நிலையில் இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா விலக வேண்டும் என அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர்.  அவர் பதவி விலகாவிட்டால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெளியேற்றப்படுவார் என கட்சி அச்சுறுத்தியது.

விரைவில் புதிய அதிபர்...
இந்நிலையில், 30 நிமிட தொலைக்காட்சி உரையில் ஜேக்கப் ஜூமா கூறுகையில், குடியரசின் அதிபர் பதவியில் இருந்து உடனடியாக நான் விலகுகிறேன் என கூறினார்.  மக்களுக்கு சிறப்பான சேவைகளை செய்திருக்கிறேன் என்றும் கூறினார். தென்னாப்பிரிக்காவின் துணை அதிபரான சிரில் ராமபூசா விரைவில் புதிய அதிபராக நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து