முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் நலம் வாழ் - சித்த மருத்துவக் கண்காட்சியினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து சித்த மருத்துவக்கல்லூரியின் மழைச்சாரல் மலரை வெளியிட்டார்கள்.

இக்கண்காட்சியில் சித்த மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம், சித்தர்கள் வரலாறு மற்றும் அவர்கள் பயன்படுத்திய கருவிகள்,  சித்த மருத்துவத்தில் நோய் கணிக்கும் முறைகள், சுமார் 600 வகையான மூலிகைகள், மருத்துவக் குறிப்புகள் மற்றும் விளக்கங்கள், பாரம்பரிய உணவு மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம், சித்தர் யோகம் மற்றும் பிரணாயாமம், தமிழர்களின்  பாரம்பரிய பழக்கங்களின் அறிவியல் விளக்கங்கள், சித்த மருத்துவத்தின் பார்வையில் நஞ்சுகளும் அதன் முறிவுகளும், யோகா மற்றும் வர்மக்கலை குறித்த செயல்முறை விளக்கம், பாரம்பரிய நெல் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பள்ளி கல்வித் துறைக்கு அடுத்தபடியாக தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அதிக  நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்காலத்தில் உடலை பேணி காப்பதில் சித்த மருத்துவம்  மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளை  மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தும் நிலை உருவாக்கப்படும். பள்ளி   மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  சென்னையில் அரசு பள்ளி மாணவர்கள் நலம் வாழ் - சித்த மருத்துவக் கண்காட்சியினை  பார்வையிட அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் பாரம்பரிய  மருத்துவம் குறித்த தகவல்களை இளையதலைமுறையினர் அறிந்து கொள்ள இந்த  கண்காட்சி வழிவகை செய்யும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து