முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11-வது ஐ.பி.எல். போட்டி அட்டவணை: முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: 11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

11-வது ஐ.பி.எல்...
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி துவங்குகிறது.  ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த தொடருக்கு ஏலத்தின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பதினோறாவது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

போட்டி அட்டவணை...
ஐபிஎல் 11-வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

மே 27-ல் இறுதிப்போட்டி
சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை விளையாட உள்ளன. இதனால், இந்த ஐபிஎல் போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மே 27-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து