முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்: ஜெயலலிதா பிறந்தநாளில் ஒராண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனை

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று கூடியது. இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் ஒராண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் கே.ராஜூ, ஆர்.வி.உதயகுமார் எம்.சி.சம்பத், பெஞ்சமின், உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம், கூடுதல் நிதித்துறை செயலாளர் அரவிந்தன், முதல்வரின் செயலாளர்கள், விஜயகுமார், செந்தில் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று காலை 11மணி முதல் பகல் 1-40 மணிவரை சுமார் 2 மணி 40 நிமிடங்கள் வரை இந்த கூட்டம் நடைபெற்றது.

இருசக்கர வாகனத்திட்டம் ....
கூட்டத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் குறித்தும் அதைத்தொடர்ந்து மானியக்கோரிக்கைகள் மற்றும் அதற்கான அறிவிப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் முதல்வர் எடப்பாடிபழனிசாமி தலைமையிலான ஆட்சியின் ஒராண்டு நிறைவு நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24-ம் தேதி சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் அதே நாளில் பணிபுரியும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் ஒராண்டு சாதனை மலர், குறும்படங்கள் தயாரித்தளிப்பது குறித்தும் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து