முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் தேயிலை கிடங்கு இடிந்த விபத்தில் 7 பேர் பலி

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு தேயிலை கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிடங்கு இடிந்தது...

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானம் அருகில் ஒரு பழைய தேயிலை கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தின்போது அந்த கட்டிடத்தினுள் 12 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசார் மட்டும் மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புப்பணிக்காக ராணுவத்தினரும் அனுப்பப்பட்டனர்.

7 பேர் பலி...

மீட்புப்பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் ஐந்து பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தேயிலை கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து