முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்லையாவின் ஒரு வாரச் செலவுக்கு ரூ.16 லட்சம் ஒதுக்கீடு செய்தது லண்டன் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

லண்டன்: லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ள இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ஒரு வார வாழ்க்கைச் செலவுக்கு ரூ.16 லட்சத்தை ஒதுக்கி அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மல்லையாவின் ரூ.10,210 கோடி மதிப்பிலான சொத்துகளை லண்டன் நீதிமன்றம் ஏற்கெனவே முடக்கிவிட்டது. எனவே, பிரிட்டன் அரசு விதிகளின் அவரது வாழ்க்கைச் செலவுக்காக நீதிமன்றம் நிதி ஒதுக்குவது வழக்கம். அதன்படி மல்லையாவின் ஒருவாரச் செலவுக்கு ரூ.4.5 லட்சம் முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தனது வாழ்க்கைச் செலவுக்குக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மல்லையா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் அவரது ஒரு வார வாழ்க்கைச் செலவை சுமார் 3 மடங்கு உயர்த்தி ரூ.16 லட்சமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான மல்லையா, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவருடைய செலவுக்கு வாரம் ரூ.16 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்திய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டுமென்று பிரிட்டீஷ் அரசுக்கு மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரிடம் கடந்த ஆண்டு ஏப்ரலில் அவர் சரணடைந்தார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து